
நேற்று இரவு சென்னை மாவட்ட
திராவிடர்விடுதலை கழகத்தினர் திடீர் கைது.
பெண் பத்திரிக்கையாளரை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யக் கோரி 16.05.2018 மாலை 3 மணிக்கு “காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை” என்று திட்டமிட்டிருந்தனர். வேப்பேரியில் நிகழ்வு நடைபெற இருந்த நிலையில் இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்), இரா.செந்தில்குமார் FDL (வடசென்னை மாவட்ட செயலாளர்), பாரி சிவக்குமார்(தமிழ்நாடு மாணவர் கழகம் அமைப்பாளர்), காவை கனி, ராஜா ஆகியோர் ஆகியோரை திடீரென முன்னறிவிப்பின்றி காவல்துறையினர் கைது செய்தனர். கைதானவர்கள் சென்னை இராயப்பேட்டை காவல் நிலையத்தில்அடைக்கப்பட்டுள்ளனர்.
என்னைக்கைது செய்து பார் என சவால் விடுகிறார் எஸ்.வி.சேகர். ஆனால் அவரைக் கைது செய்யாமல் அவரை கைது செய்யவேண்டும் என்று சொல்பவர்களைக் கைது செய்கிறது காவல்துறை.


