
இசைப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராகும் சகல தகுதிகளோடும் இருக்கும் தமிழிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அந்த பதவிக்காக விண்ணப்பித்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியை விடத் தகுதி குறைவான பிரமிளா குருமூர்த்தி என்பவருக்கு, விதிமுறைகளை மாற்றி அந்தப் பதவியை வழங்கியிருக்கிறது தமிழக அரசு.
புஷ்பவனம் குப்புசாமி தமிழர், தமிழிசைப் பாடகர், இசைக்காக இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி பட்டம் வென்றவர். அகில இந்திய வானொலியின் ‘ஏ கிரேட்’ தகுதி பெற்றவர்.
பிரமிளா குருமூர்த்தி கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர், பிராமணர், கர்நாடக இசைப்பாடகர். ஒப்பீட்டளவில் புஷ்பவனம் குப்புசாமியை விட தகுதிக் குறைவானர்.
இசைக்கு சாதி கிடையாது என்று சிலர் சொல்வார்கள். ஆனால் – நாட்டில் எல்லாவற்றிலுமே சாதிதான் முதன்மையாக இருக்கிறது என்பதற்கு ‘புஷ்பவனம் குப்புசாமியை நிராகரித்து விட்டு, தகுதிக் குறைவான பிரமிளா குருமூர்த்தியை பதவிக்கு கொண்டு வந்திருப்பது’ ஒரு ஆதாரம் ஆகும்.
புஷ்பவனம் குப்புசாமி அளவுக்கு தகுதிபெறாத வேறொரு நபருக்கு, ‘அவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பிராமணர் என்பதால்’ அந்தப் பதவியைத் தருவது அநியாயம் இல்லையா? சாதிக்காக தகுதியைத் தூக்கி குப்பையில் வீசலாமா? நீதியைக் குழிதோண்டிப் புதைக்கலாமா?
