
படம் — அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது
நவம்பர் 8,9.2017 ஆகிய நாட்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் கேடாக முடிவடைந்தன.
இந்தியாவின் மாபெரும் பலம் இந்தியப் பெருங்கடலின் மீதான இந்திய இராணுவ ஆதிக்கம்தான். சீனாவின் மாபெரும் பலவீனமும் அதுதான். தற்போது இலங்கை மற்றும் மாலத்தீவினை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து – இந்தியாவின் இராணுவ வலிமைக்கு மரண அடி கொடுத்துள்ளது.
நவம்பர் 8,2017 – மாலத்தீவு நாடு சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (FTA – free trade agreement) கையொப்பம் இட்டது. இதன் மூலம் கடல்சார் பட்டுப்பாதை (Maritime Silk Road – MSR) எனும் மிகப்பெரிய சீன இராணுவ தந்திரோபாய நடவடிக்கையில் மாலத்தீவு பங்குதாரராக மாறியது.
நவம்பர்9,2017 – இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இது சீனாவின் முத்துமாலை திட்டத்தில் (string of pearls) மிக முதன்மையான அங்கமாக மாறியுள்ளது.
சீனாவின் கைக்கூலிகளான இந்திய வெளியுறவு அதிகாரிகள்தான் காங்கிரசு ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தனர். அவர்கள்தான் இப்போது மோடி ஆட்சியிலும் சீனாவின் நலனுக்காக வேலை செய்கிறார்கள்.
//”போர் வந்தால் சீனாவிடம் இந்தியா தோற்கும்: தமிழர் விரோத வெளியுறவு கொள்கையால் பேராபத்து!”
இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகம் நாளை (9.12.2017) சீனாவிற்கு முறைப்படி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பினை சீனாவிற்கு விற்பனை செய்யும் இந்திய வெளியுறவு துறையில் உள்ள சீனாவின் கைக்கூலி அதிகாரிகளின் சதிச்செயல் முழுமை அடையப்போகிறது!
“இந்திய அரசில் சீனாவின் கைக்கூலிகள்”
சீனாவின் பலவீனமும் இந்தியாவின் பலமும் இந்தியப் பெருங்கடல்தான். சீனாவின் பொருளாதாரம் முழுக்க முழுக்க இந்தியப் பெருங்கடல் வழியை நம்பிதான் இருக்கிறது. இந்த கடல்வழித்தடம் இதுவரை இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்த பாதுகாப்பு வியூகத்தின் முக்கிய அங்கமாக தமிழீழம் இருந்தது. அதாவது, இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடற்கரை தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால், இந்திய வெளியுறவுத் துறையில் கோலோச்சிய சீனாவின் கைக்கூலிகளால் (இவர்கள் அனைவரும் மலையாள மொழி பேசுவோர் ஆகும்) இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்பட்டுவிட்டது. இவர்கள் இந்தியப் பெருங்கடலை ஒட்டுமொத்தமாக சீனாவிடம் விற்றுவிட்டனர்.
இந்திய வெளியுறவுத் துறையில் உள்ள சீன கைக்கூலிகள் – தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் – தமிழர்களின் கடற்பகுதியை இலங்கை அரசிடம் அளித்தனர். இப்போது இலங்கை அரசு இலங்கையின் கடற்பரப்பை சீனாவிடம் 99 வருட குத்தகைக்கு விற்றுவிட்டது.
இந்த விற்பனை மூலம் இந்திய கடற்பரப்பு சீனாவிடம் சென்று விட்டது. இனி எப்போது போர் வந்தாலும் இந்தியா சீனாவிடம் தோற்கும் என்பதுதான் புவிஅரசியல் நிலைமை. அதாவது, ஈழத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்ததன் மூலம், சீனாவிடம் இந்தியாவின் பாதுகாப்பை விற்றுவிட்டனர் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள்!
“சீனாவின் மாபெரும் திட்டமும் – இந்தியாவின் ஏமாளித்தனமும்”
சீனா தனது முத்துமாலை திட்டத்தின் (string of pearls) மூலம் இந்தியாவை முழுமையாக சுற்றி வளைத்துள்ளது. மியான்மர், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், பாகிஸ்தான் என இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் தனது கடற்படை தளத்துக்கான ஏற்படுகளை கட்டமைத்து விட்டது சீனா.
அண்மையில் மாலத்தீவுகளுடன் சுதந்திர வணிக ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளது. தற்போது இலங்கையின் கடற்கரையையும் கைப்பற்றியுள்ளது. இவை எல்லாவற்றையும் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது இந்தியா. இந்தியாவின் இந்த ஏமாளித்தனத்துக்கு – இந்திய வெளியுறவு துறையில் உள்ள சீன கைக்கூலிகள்தான் ஒரே காரணம்.
“என்ன செய்ய வேண்டும்?”
முதலில், இந்திய வெளியுறவு துறையை மலையாள மொழி பேசும் சீன கைக்கூலிகளிடம் இருந்து மீட்க வேண்டும்.
அடுத்ததாக, சீனாவின் முத்துமாலையை அறுக்க வேண்டும். அதாவது, இலங்கை கடற்பரப்பை ஈழத்தமிழர்கள் கைப்பற்ற வழி செய்தாலே, சீனாவின் முத்துமாலை அறுந்துவிடும். இதற்கு அடுத்த கட்டத்தில் வியட்நாம் மற்றும் ஜப்பான் நாட்டுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.
இந்த உறுப்படியான வியூகத்தின் மையப்புள்ளியாக இருப்பது – இலங்கையின் கடற்பரப்பை ஈழத்தமிழர்கள் கைப்பற்றுவதுதான். இது ஒன்றுதான் இந்தியாவை சீனாவிடம் இருந்து பாதுகாக்கும் ஒரே வழி.
“இது நடக்குமா?”
நடக்காது. ஏனெனில், “மகன் செத்தாலும் பரவாயில்லை. மறுமகள் தாலி அறுக்க வேண்டும்” என்பதுதான் இந்தியாவின் வெளியுறவு கொள்கை.
அதாவது, இந்தியாவை சீனா தோற்கடித்தாலும் பரவாயில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் மலையாளிகளின் வெளியுறவு கொள்கை இருக்கும் வரை – இந்தியாவின் பாதுகாப்புக்கு வழியே இல்லை!
– அருள்ரத்தினம்


