ஒரே தேதியில் மோதும் கொடிவீரன்-திருட்டுப்பயலே-2..!


‘குட்டிப்புலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் முத்தையா டைரக்சனில் மீண்டும் ‘கொடிவீரன்’ படத்தில் நடித்துள்ளார் சசிகுமார். வழக்கம்போல் பி அன் சி ஆடியன்ஸை குறிவைத்து ‘கொடிவீரன்’ படத்தை களமிறக்க உள்ளனர். அதேபோல், 2006ல் வெளிவந்து வெற்றிபெற்ற ‘திருட்டுப்பயலே’ படத்தின் இயக்குனர் சுசிகணேசன் இப்போது அதன் இரண்டாம்பாகத்தை பாபி சிம்ஹாவை நாயகனாக்கி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ளார். பிரசன்னா, விவேக், சனம் ஷெட்டி, ரோபோ ஷங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர் இந்தநிலையில் இம்மாதம் 30ஆம் சசிகுமாரின் ‘கொடிவீரன்’ படத்தையும், பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திருட்டுப்பயலே-2’ படத்தையும் வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாவது சுவாரஸ்யமான போட்டி தான்..

Leave a Response