
பாரதியசனதாக்கட்சியின் தமிழகத்தலைவர் தமிழிசை, ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டார். அம்பிகாராதா தோட்டத்தில் இப்படத்தின் தொடக்கவிழாவும் படப்பிடிப்பும் மார்ச் 16 காலை நடந்தது.
இந்தப் படத்தில் விக்ரம்சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ரக்ஷன் நடிக்கிறார்.
கதாநாயகியாக சாரா தேவா நடிக்கிறார். மற்றும் நிழல்கள்ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, போஸ்வெங்கட், டி.பி.கஜேந்திரன், டெல்லிகணேஷ், அப்புக்குட்டி,பிளாரன்ட் பெராரா, ஓசூர் மாதேஷ், சுடர்மதி, ரேகா, மதுமிதா, தேவதர்ஷினி, மதுரை புலி, காளிச்சரண், ஸ்டன்ட் சர்வியானந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, லால்பாபு. இசை தாஜ்நூர்.
பாடல்கள். நா.முத்துகுமார், யுகபாரதி
கலை. ராம். சண்டைப்பயிற்சி ஜாக்குவார் தங்கம்
படத்தொகுப்பு ராஜ்கீர்த்தி ஆகிய பெயர் பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள் பங்குபெறும் இந்தப்படத்தை ராமாபுரம் ராஜேஷ் தயாரிக்கிறார்.
ஏற்கனவே ஒரு தொட்டில் சபதம், ரயிலுக்கு நேரமாச்சு உட்பட பல படங்களை இயக்கிய பாரதிமோகன்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இந்தப் படத்தில், ஒரு தாதா பிடியில் சிக்கித் தவிக்கும் பிரபல சினிமா இயக்குனரின் போராட்டமும், அதிலிருந்து அவரை கதாநாயகனும் அவனது நண்பர்களும் எப்படி மீட்டு வருகிறார்கள் என்பதை பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து சொல்லவிருக்கிறோம் என்கிறார்.
