ஆரவ், ஓவியா ஆகியோரைப் பற்றி ஜூலியின் இப்போதைய எண்ணம் இதுதான்

ஆரவ்வைப் பார்த்தா ஒரு மாதிரி இருக்கு என்று ஜூலி காயத்ரியை தனிமையில் அழைத்து முன்பு சொல்லியிருந்தார். அதை நினைவுப்படுத்தி “ஆரவ்வைப் பார்த்தா இப்பவும் ஒரு மாதிரி இருக்கா?” என்று ஆரத்தி கேட்டதற்கு ஜூலி மட்டுமல்லாமல் ஆரவ்வும் சங்கடம்.

ஏன் இப்ப பழைய விஷயங்களைக் கிளர்றீங்க? என்று கோபப்பட்டார். ஆரவ்வை முதல்ல இருந்தே ‘அண்ணா’ ன்னுதான் கூப்பிடறேன். அவர் கண்களை பார்த்தா, சிகரெட் பிடிக்கற ஸ்டைலைப் பார்த்தா எங்க அப்பா ஞாபகம் வருது’ன்னு சொன்னேன்என்று ஜூலி விளக்கமளித்தார்.

பொதுப்பார்வைக்கு ஜூலி ஆரவ்வின் மீது இனக்கவர்ச்சி கொண்டிருப்பது போலத்தான் ஜூலியின் அந்த உடல்மொழியை வைத்து அந்த நிகழ்வைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ‘அவர் எனது தந்தையை நினைவுபடுத்தினார் என்று ஜூலி விளக்கம் அளிக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே முறை.

அப்பாவைப் போய் யாராவது குறுகுறுன்னு பார்ப்பாங்களா? என்றெல்லாம் துருவிக் கொண்டிருப்பது நாகரிகமன்று. இதைத்தான் ஆர்த்தி செய்து கொண்டிருக்கிறார். மேலும், ஒருவருக்கு சங்கடமளிக்கும் பழைய விஷயங்களை அவரிடமே கிளறிக் கொண்டிருப்பதும் நல்லது ஆகாது.

ஓவியா விஷயத்தில் ஏன் பொய் சொல்லி துரோகம் செஞ்சீங்க? என்று ஜூலியிடம் கேட்டபோது, “நான் செஞ்சது தப்புதான். ஆனால் அந்தச் சமயத்தில் எனக்குக் குழப்பமாக இருந்தது. வழக்கமாக நான் மசாலா போட்டு விஷயங்களை மிகையாக்குபவள்தான். ஆனால் இந்த விஷயத்தில் உண்மையாகவே எனக்கு குழப்பம்’ என்று ஜூலி விளக்கம் அளித்தார்.

Leave a Response