விஜய் ரசிகர்களின் அன்பில் மிரண்ட மேஜிக்நிபுணர்

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று மேஜிக் நிபுணர் வேடம். இந்தக் கதாபாத்திரத்துக்காக உண்மையான மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி எடுத்திருக்கிறார் விஜய்.

விஜய்க்கு மேஜிக் கலைகளைக் கற்றுக் கொடுத்தவர்களில் ஒருவர் கோகோ ரெக்யூம்(Gogo Requiem). அவர் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் விஜய் பற்றிப் பேசியிருக்கிறார். அதில்,

இந்த மிகப்பெரிய மரியாதைக்கு நன்றி. கடந்த 24 மணி நேரத்தில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எனக்குக் கிடைத்த அன்பின் அளவை நம்பமுடியவில்லை. மிக்க நன்றி. ஆனால் நான் இதற்கு தகுதியானவன் அல்ல. நான் ஒரு சாதாரணமானவன்.
மெர்சல் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் மசிடோனியாவில் நடக்கும்போது ஜோசஃப் விஜய்யுடன் பணியாற்றும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

படத்தைப் பற்றி என்னால் இப்போது அதிகம் பேச முடியாது. இன்னும் சில மாதங்களில் படத்தை மொத்தமாகப் பார்ப்பீர்கள். விஜய் அற்புதமான நடிகர் மட்டுமல்ல அட்டகாசமான மந்திரவாதியும் கூட என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

நான் மட்டுமல்ல, டானி பென்னெட், ராமன் ஷர்மா என இன்னும் இருவர் உடன் இருந்தனர். அவர்களோடு இந்தியாவிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் படத்தில் பணியாற்றினர். அவர்களோடு பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம்.

இவ்வாறு கோகோ ரெக்யூம் தெரிவித்துள்ளார்.

Leave a Response