
சனியனைக் காப்பாத்தி ஜனங்க போட்ட ஓட்டையெல்லாம் வீணாக்கினாலும் ஏழர ஏழரதான் பிக் பாஸ் இன்னைக்கு மரண கடி.
பசிக்கவில்லை எனினும் காயத்ரி இருக்கிறாள் எனும் கடுப்பில் வாய் துறுதுறுவென்றது. இரண்டு ஸ்பூன் பீநட் பட்டரும் கொஞ்சம் சிப்ஸும் தின்றுவிட்டேன்.
மயிருங்கறது கெட்டவார்த்தையா – காயத்ரி
அதானே. இவ்ளோ பண்ணியும் இன்னும் காயத்ரிங்கிறதே பிக் பாஸுக்குக் கெட்டவார்த்தையாகல அப்பறம்தானே மயிரு.
தனக்கு இந்த வாரம் எலிமினேஷன் இல்லைனு தெரிஞ்சிருந்தா, இயல்பாவே உர்ருனு இருக்கிற காயத்ரி பேபி பாவம் கேமராவைப் பாத்துக் கொஞ்சியும் இருக்காது ஓவியாகிட்ட மன்னிப்பும் கேட்டிருக்காது இல்லையா பிக் பாஸ்.
அய்யையோ பிக் பாஸ்ல அடுத்து இதுவா (பிரியாபவானிசங்கர்). பொன் வெச்ச இடத்துல பூ வெக்கிறேன்னு அடுத்தடுத்து நம்பள இப்படி அலங்கோலம் பண்ண ஆரம்பிச்சிட்டானே விஜய் டிவி
-விமலாதித்தமாமல்லன்


