செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன் தில்லிதன்னை ஒழிக்க வேண்டும் நாம்.

இன்று பாவேந்தரின் 127 வது பிறந்தநாள்.

இந்தியத் தேசியத்தை தன்னுடைய கவிதை என்னும் பீரங்கிக் குண்டுகளால் அழிக்க முனைந்த போராளி. தமிழ்த் தேசியத் தலைமைப் பாவலன்.

தில்லி ஒழிக!

செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன்
தில்லிதன்னை ஒழிக்க வேண்டும் நாம்.
குந்திச் சிறிய கதைபேசித் திரியும்
குள்ளத் தலைவர் குற்றம் செய்தனர்
இந்திச் செய்தியில் நடந்த தெப்படி?
இன்பத் தமிழை மாய்ப்பதும் கண்டோம்!
பைந்தமிழ் நாட்டுக் குள்ள அதிகாரம்
பத்தில் ஒன்றும் பலித்ததா நமக்கு?
நாட்டினை ஆண்ட தமிழா அடிமைகள்?
காட்டு மிராண்டிக் கழுதையா ஆள்வது?
நாட்டையும் மொழியையும் நசுக்குதல்
கண்டும்;
நாய்வாழ்க் கையைநாம் நாடுதல் நல்லதா?
புலவர் உள்ளனந் எதற்குத்தாம்
உள்ளனர்?
பொன்னுளார் உள்ளனர் எப்பயன்
கண்டோம்?
கலைஞர் வாழ்கின்றார்; எதற்காக
வாழ்கின்றார்?
கைவிலங் குக்கு மெருகு போடவா?
சோறுண்ணுகின்றோம்;
நாயுண்ண வில்லையா?
துன்பமற்ற தலைமுறை செய்வோம்
ஆறு பாய்ந்தெனத் தமிழர்கள்
பாய்க!
அழிக்கும் பகையை
அழிப்பதற்கே!
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Leave a Response