
21-04-2017 புரட்சிப் பாவலர் பாவேந்தன் பாரதிதாசன் அவர்களின் 53ஆம் ஆண்டு நினைவுநாள் – புகழ்வணக்கம்
========================================
“தமிழர் என்று சொல்வோம் – பகைவர்
தமை நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் – கொடியை
ஏற வைத்த நாங்கள்.
தமிழர் என்று சொல்வோம் – பகைவர்
தமை நடுங்க வைப்போம்
நமத டாஇந் நாடு – என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் – என்றே
தாக்கடா வெற்றி முரசை!
எந்த நாளும் தமிழர் – தம்கை
ஏந்தி வாழ்ந்த தில்லை.
இந்த நாளில் நம்ஆணை – செல்ல
ஏற்றடா தமிழர் கொடியை.
வையம் கண்ட துண்டு – நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப்
பெய்யும் முகிலின் இடிபோல் – அடடே
பேரி கைமு ழக்கு.
தமிழர் என்று சொல்வோம் – பகைவர்
தமை நடுங்க வைப்போம்”
…
“செந்தமிழை; செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.”
…
என்று தன் புரட்சிப் பாக்களால் இன உணர்வும் மான உணர்வும் ஊட்டி, தமிழ் இளம் பிள்ளைகளுக்கு, புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த அவர்களைப் புலிகளாக மாற்றிய எழுச்சிப் பாவலர்
பாவேந்தன் பாரதிதாசனின் நினைவுநாள் இன்று (21-04-2017).
மானத் தமிழ்ப் பிள்ளைகள் மறக்காமல் அந்தப் பெரும் தமிழருக்குப் புகழ் வணக்கம் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.


