
மிருதன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘டிக் டிக் டிக்’ ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படமாக இது உருவாக்கி வருகிறது.
‘டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மூணாரில் நடைபெற்றது. திரைப்படத்தின் மிகவும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென அழையா விருந்தாளியாக ஒரு காட்டு யானை படப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்தது.
இதனை கண்டு படக்குழுவினர் பீதியனடைந்து பாதுகாப்பு கருதி படப்பிடிப்பை ரத்து செய்தாலும், அந்த யானையோ அங்குள்ள குளத்தில் தண்ணீர் குடித்து, சற்று நேரம் இளைப்பாறிவிட்டு அமைதியாக சென்றுவிட்டதாம்..
அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஆணையிறங்கல் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் அறிந்து தாங்கள் அஞ்சியதாக இயக்குனர் சக்தி கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்து விட்டதாம்.


