ஆங்கிலத்தில் விக்ரம் படத்திற்கு டைட்டில் வைத்தது ஏன்..?


நடிகர் விக்ரம், தற்போது ‘வாலு’ படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்போது ‘ஸ்கெட்ச்’ என்று வைத்துள்ளனர். இந்தப் படம் ‘ஜெமினி’ படம் போன்று அடிதடி படமாக அமையவுள்ளது.

வடசென்னையை கதைக்களமாகக் கொண்ட இந்த படத்தில் தாதாவாக நடிக்கும் விக்ரம், தாடி வைத்து லுங்கி அணிந்து நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, இன்னொரு நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் படத்தின் தலைப்பு ‘ஸ்கெட்ச்’ என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இது ஆங்கில வார்த்தை என்பதால், தற்போது வேறு தலைப்பை யோசித்து வருகிறார்கள். அதனால் இந்த ‘ஸ்கெட்ச்’ தலைப்பு தற்காலிகமானதுதான். படம் வேறு தலைப்பில்தான் திரைக்கு வரும் என்கிறார்கள் படக்குழுவினர்

Leave a Response