சசிகலா அணிக்கே இரட்டைஇலை சின்னம் கிடைக்கும். எப்படி?


இரட்டைஇலை சின்னம் தொடர்பான சர்ச்சை இப்போது உச்சத்தில் இருக்கிறது.

இருதரப்பினரும் தங்களுக்குத்தான் அதிக ஆதரவு என்று கோரும் பிரிவை எப்படி தேர்தல் ஆணையம் நிறுவும்? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.
இது குறித்து தேர்தல் ஆணைய வழிமுறையில்,
அதாவது குறிப்பிட்ட கட்சி உடை வதற்கு முன் சேர்ந்திருந்தபோது, கட்சியின் விதிமுறைகளையும், நிர்வாகிகள் பட்டியலையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். கட்சியின் உயர்நிலை குழுக்களை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு, இதில் எத்தனை நிர்வாகி கள், உறுப்பினர்கள் எதிர்கோஷ்டி யினரை ஆதரிக்கின்றனர் என்பதை ஆய்வு செய்யும். ஆட்சியமைப்புப் பிரிவில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாக்குமூலப் பதிவுகளுடன் அளிப்பதை பரிசீலனைக்கு ஏற்று இவர்கள் எந்தப் பிரிவை ஆதரிக்கிறார்கள் என்பது முடிவு செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். இதன்படி பார்த்தால் அதிக அளவில் கட்சி நிர்வாகிகள் தினகரன் பக்கம் இருப்பது மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் தினகரனுக்கே பெரும்பான்மை பலம் இருப்பதாலும் இரட்டைஇலை அவருக்கே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response