வங்கக் கடலில் மட்டும் 2,69,000 டன்கள் அளவில் பிளாஸ்டிக் குப்பைகள்- அதிரவைக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

இந்த உலகம் உயிர்களுக்கானது என்பதைக் கொஞ்சமும் கணக்கில் கொள்ளாமல் மனிதர்களுக்கானது மட்டும் என்கிற மமதையோடு நடந்துகொள்ளும் மனித இனத்தின் நடவடிக்கைகளால் கடல்வளம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார் எழுத்தாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

கடலிலுள்ள நீர் 63% வேதியல் பொருட்களும் 2 % நன்னீரும் % விழுக்காடு உவர் நீராகவும் உள்ளன. இந்த கலவை விகிதம் ஒவொரு கடலுக்கும் மாறுபடுகிறது. இந்தகலவை விகிதம் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகள் கடலில் ஏற்படும். உதாரணமாக கடலிலுள்ள உயிரினங்கள் அழியலாம். அதனைத் தொடா;ந்து இந்த புவியின் தட்ப வெப்ப நிலையை சீராக பராமாக்கும் பணி பாதிக்கப்பட்டு உலகம் பல பாதிப்புகளுக்கு உட்படும் ஏற்கனவே காலநிலை மாற்றத்தினால் பூமி சூடாவதால் கடல் நீர் அதிகமாக சூடாகி அதிலுள்ள வேதியல் தன்மையின் காரணமாக கடல் அமிலத்தன்மை பெற்றுவருவதாக எச்சரித்து உள்ளனர். உள்நாட்டிலும், கடற்கரையிலும் உள்ள தொழிற்சாலைகளும், சுற்றுலா விடுதிகளும்  தங்களது கழிவுகளைக் கடலில் கொட்டுகின்றனர்.

கடலில் கொட்டப்பட்டு மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளின் அளவு குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வந்துள்ளன வங்கக் கடலில் மட்டும் 2,69,000 டன்கள் அளவில் பிளாஸ்டிக் குவியல் மலை மலையாகக் குவிந்துள்ளது. இதை ஆய்வு செய்யும் மார்குஸ் எரிக்சன் 24 தனது கடல் பயணங்களின்  மூலம் நேரில் கண்ட அவலங்களை வெளிபடுத்தியும் உள்ளார்.

இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு புறம் இருக்க இன்னொரு கவலை தரும் தகவலும் வந்துள்ளது. தொடர்ந்து உலகளாவிய காப்பரேட்டுகளின் நிப்பந்தத்தினால் ஐ.நா.வின் சர்வதேச கடல் நிலப்பரப்பு அமைப்பு பசிபிக் இந்தியா மற்றும் அட்லாண்டிக் சமுத்திரங்களில் ஆழ்கடலில் உள்ள புதைந்து கிடக்கும் கனிம வளங்கள் குறித்து ஆராயவும் தோண்டி எடுக்கவும் 7 உரிமங்கள் வழங்கியுள்ளனர்.

கடலின் ஆழத்திலுள்ள நிலத்தில் கனிம வளங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை பாலி மெட்டாலிக் சல்பைட்ஸ், பாலி மெட்டாலிக் மேக்னீஸ் நோடுல்ஸ் மற்றும் கோபால்ட் வளமுள்ள பெரோ மேக்னீஸ் ஆகியவை. இவை கடலின் ஆழத்திலுள்ள மலைகளிலும். சமவெளிகளிலும் பல ஆயிரம் டன் கணக்கில் ஒட்டியுள்ளன. இவற்றை ராட்சத எந்திரங்கள் கொண்டு தோண்டி எடுக்க ஆரம்பித்தால் இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத பல கொடிய பாதிப்புகள் ஏற்ப்படும். எண்ணற்ற அரிய வளங்களையும் பூமியின் தட்ப வெப்ப நிலையைச் சீராகப் பராமரிக்கும் மிக அற்புதமான பணியைச் செய்து வரும் கடல்களும்  ஒயாத இலாப வெறியினால் பெரும் குப்பைத் தொட்டிகளாகும்.

இயற்கையின் அருட்கொடைகளை மனித இனம் நாசம் செய்கிறது.
இது நியாயம் தனா?

Leave a Response