
விஜய் தற்போது மாறுவேடங்களில் அல்லது முகத்தை மறைத்துக்கொண்டு பொது இடங்களில் வந்து கொண்டிருக்கின்றார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் நடந்த போராட்டத்தில் முகத்தில் துணையைக் கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக உட்கார்ந்திருந்தார். யாரிடமும் தான் யார் என காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தார்.
இதேபோல் சமீபத்தில் பழனி கோயிலுக்கு சென்ற நடிகர் விஜய் காவி வேட்டி கட்டிக்கொண்டு, காவி துண்டால் முகத்தை மறைத்து சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
இந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதனால் படப்பிடிப்பு காட்சியா என கேட்டதற்கு இல்லை என மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வந்தது விஜய் இல்லையாம், ரசிகர் ஒருவர் விஜய் போலவே கெட்டப் செய்துக்கொண்டு வந்துள்ளார், அது விஜய் என வைரலாகியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.


