
வி.கே.சசிகலா.
சசிகலாவைப் போல தமிழக வரலாறில் வெறுக்கப்பட்ட வேறு ஒரு நபர் இல்லை.
இவ்வளவுக்கும் நம்மில் யாருக்கும் அவர் நேரடியான தொடர்பில்லாதவர்.
கட்சியில் அவரால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவருக்கு இன்று வரை இவ்வளவு எம்.எல்.ஏ க்கள் ஆதரவு இருக்காது.
ஆக அவர் மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாமே கேலி ரகம்.
ஆயா கொலைகாரி போன்றவை. இவற்றைத் திட்டமிட்டு உருவாக்கிய சென்னை மீம்ஸ் பாஜகவின் ஆட்கள் என்பது அவர்கள் பொன்னார் மற்றும் ரவிசங்கர் பிரசாத்துடன் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.
ஒரு நபரை வெறுக்க எனக்கெல்லாம் அனுபவம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
கேள்விப்பட்டேன் என்கிற இடத்தில் புகார் செய்பவர்களின் தரத்தையும் மனதில் ஓட விடுவேன்.
பாஜக சசியை ஏற்கக் கூடாது என்று எல்லோரையும் வற்புறுத்தியது.
இதைப் பன்னீர் செல்வத்தை வைத்து நிறைவேற்றக் காரணம் சாதி.
சாதியின் அடிப்படையில் சசியின் மேல் நடந்த தாக்குதல் தான் முக்கியமானது.
அதை சசிகலாபுச்பா தமிழிசை போன்றோர் செய்தார்கள். அதை பாஜக நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.
சசிகலா குற்றவாளியாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர் மீது கொலைப்பழி போடுவது என்பதை உடனே ஏற்க சாதிய மனோபாவத்தை வைத்து விளையாடும் உளவியல் விளையாட்டு முக்கியமான காரணி.
அந்தக் கட்சி அழியும் என்று நம்பியவர்களிடையே போராடித் தோற்றார். அதனால் ஒன்றுமில்லை. அது அவர்களின் உட்கட்சி விவகாரம்.
பாஜக அருணாசலப்பிரதேசம் பீகார் போன்று தமிழகத்திலும் சசிகலா வெறுப்பைக் கட்டமைத்து ஒரு ஆட்டத்தை ஆடி முடித்தது.
அதிகமாக பெண்கள் தான் வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக பேச வைத்தார்கள். சீ அந்தப் பொம்பளையா? என்பது அவர்களின் ஏதோ ஒரு போதாமையாகவே நான் இன்று வரை உணர்கிறேன்.
பெண்கள் பிற பெண்களைப் பார்க்கும் விதம் எனக்கு எப்போதும் பயம் காட்டுவது. கல்யாணம் ஆனவன் என்பதால் இதைக் கொஞ்சம் உணர முடிகிறது.
பன்னீர் நத்தம் போன்ற யோக்கியர்களிடம் திறமை எளிமையைக் கண்டதைப் போன்ற நாடகம் ஒன்று நடத்தப்பட்டது.
அக்யூச்டுகள் சிரித்த முகத்தோடு வலம் வந்தார்கள்.
பாஜக தில்லியில் போட்ட மிரட்டல் இன்று சசி ஆதரவாளர்கள் ஏதோ வன்முறையில் ஈடுபடப் போகிறார்கள் போன்ற சினிமா ஆர்க்கிடைப்புக்களை தமிழினக் குடிகள் மேல் மீண்டும் மீண்டும் வைக்கத் தான் செய்வார்கள்.
ஒரு அரசியல்வாதியின் துவக்கத்தையே அழிக்க மக்களின் பார்வையை ஒரே இடத்தில் வைத்த காவி எப்போதும் டிஜிட்டல் சண்டையில் கில்லி.
அடுத்த தேர்தலிலும் ராகுல் இதை முறியடிக்க முடியாது.
ஒரு வேலை சசியின் எல்லா அரசியல் முயற்சிகளையும் முறியடித்தாலும் உள்ளே ஒரு கரண்ட் இருப்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.
மற்றவனுக்கு சாதி வெறிப்பட்டம் கட்டி மகிழும் பிராமணியம் அடியாழத்தில் வெறுக்கப்படுகிறது.
பொறுத்திருந்து பாருங்கள் கமலஹாசனே பத்ரியே ஞாநியே.
நீங்கள் ஒரு ஆதாரத்தையும் வைக்காமல் குற்றம் சாட்டியதால் உங்கள் நேர்மை பற்றி எப்போதும் எனக்கு சந்தேகம் உண்டு.
அதெப்படி ஒரு சாதியினரை மட்டும் எப்போதும் தற்காப்பு செய்யும் விதமாகவே தாக்குதல் செய்கிறீர்கள்.
அவனுங்ககிட்ட போயி பிள்ளைகுட்டிகளைப் படிக்க வைங்க என்று திமிராகச் சொல்கிறீர்கள். இந்த சாதிய வெறியில் இருந்து கூட தமிழ் தேசியம் பிறக்கலாம்.
அப்போது உங்களை வெறுக்க எங்களுக்கு காரணமே தேவைப்படாது.
இளங்கோ கல்லானை ..மானுடவியலாளர்


