சிருஷ்டி டாங்கேயின் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகுமா..?


சிருஷ்டி டாங்கே. தற்போது உதயநிதியுடன் ‘சரவணன் இருக்க பயமேன்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர் அறிமுகமான ‘மேகா’ படம் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது என்றாலும், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், விஜய்சேதுபதியுடன் அவர் நடித்த தர்மதுரை படத்தில் அவரது நடிப்பு பாரட்டப்பட்டதுடன் படமும் வெற்றி பெற்றது. ஆனால் அந்தப்படத்தின் வெற்றிக்கு காரணமாக ஒரு சென்டிமென்ட் ஒன்றை தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார் சிருஷ்டி டாங்கே..

“அந்த படத்தில் எனது கேரக்டர் இறந்து விடும். அதனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை தொட்டது. அதையடுத்து இப்போது சரவணன் இருக்க பயமேன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நானும், ரெஜினாவும் நடிக்கிறோம். இதிலும் கதைப்படி நான் நடித்துள்ள கேரக்டர் இறந்து விடுவது போன்று உள்ளது. அதற்கான காரணம் ரொம்ப அழுத்தமானதாக அமைந்துள்ளது. அதனால், தர்மதுரை படத்தைப்போலவே இந்த படத்திலும் எனது கேரக்டரும், நடிப்பும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்கிறார் சிருஷ்டி டாங்கே. அவரது இந்த சென்டிமென்ட் அவருக்கு கை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Response