
லயோலா கல்லூரியில் நாளை நடைபெறவிருந்த பொதுக்குழுவுக்கான அனுமதியை ரத்தானதை தொடர்ந்து, இப்போது நடிகர் சங்க வளாகத்திலேயே பொதுக்குழுவை நடத்த இருக்கிறார்கள். நடிகர் சங்க வளாகத்தில் நடக்கும் பொதுக்குழுவுக்கு காவல்துறையின் அனுமதியும் கிடைத்திருக்கிறது.
இது பற்றி விஷால் கூறும்போது, “கடந்த மார்ச் மாதம் ஒரு பொதுக்குழு, லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அங்கு தற்போது பொதுக்குழு நடத்தக் கூடாது என்று தொலைபேசியில் மிரட்டியிருக்கிறார்கள். எங்களுக்கும் அத்தகவல் வந்தது. யார் மிரட்டினார்கள், எதற்காக என்று யோசிப்பதற்கு எல்லாம் இப்போது நேரமில்லை.
எங்களைத் தடுப்பதன் மூலம் எங்களை வலுவாக்கியே வருகிறார்கள். இந்த பொதுக்குழுவிலும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். எங்கள் நிலத்திலேயே பொதுக்குழு நடத்த, எங்களைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. லயோலா கல்லூரியில் பொதுக்குழு நடத்தவிடாமல் தடுத்த மர்மமான நபருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் விஷால்.


