
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு கௌதம் மேனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரின் நடிப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது தஹ்னுஷ் பற்றி குறிப்பிடும்போது. “தனுஷ் ஒரு பச்சோந்தி. எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ, அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை தனுஷிடம் இருக்கிறது” என கூறியுள்ளார்.
என்னதான் அதிகப்படியாக புகழ்வதாக இருந்தாலும் துரோகம் செய்வோரை குறிப்பிடுவதற்காக பயன்படும் பெயரான ‘பச்சோந்தி’ என்கிற வார்த்தையை அவர் குறிப்பிட்டிருக்க வேண்டாம் தான். அதேசமயம் சிம்பு பற்றி கூறும்போது, “சிம்புவும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்பவர்தான். ஆனால் சில நேரங்களில் அவரின் கவனம் கதாபாத்திரத்தில் இருந்து சிதறிவிடும். அவரின் திறமைக்கு தீனி போடும் வகையில், ஒரு நல்ல ஆக்ஷன் திரைப்படம் அமைந்தால் சிறப்பாக இருக்கும்.”என கூறியுள்ளார் கெளதம் மேனன்.


