
சர்வம் சக்தி மாயம் என்பது தெரியும்.. அதென்ன சர்வம் தாள மயம்..? இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் என்பதால் இப்படி ஒரு டைட்டிலை வைத்துள்ளார் இயக்குனர் ராஜீவ் மேனன்.. ஆம்.. அஜித்தை வைத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய அதே ராஜீவ் மேனன்தான்..
தற்போது இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ‘சர்வம் தாள மயம்’ என தலைப்பிட முடிவு செய்துள்ளாராம்.. உலகத்தில் அனைத்திலுமே தாளம் உள்ளது என்பதை கூறும் விதமாக இந்த தலைப்பு வைக்கவுள்ளனர். இசைக் கலைஞராக பல்வேறு வாத்தியங்கள் வாசிப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது. இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷுக்கு இது எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்துக்கு இசைப்புயல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசியயமைக்கவிருக்கிறார். ‘மின்சார கனவு’ ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ராஜீவ் மேனன், எ.ஆர்.ரகுமான் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.
