
சாதனைகளும் பஞ்சாயத்து சர்ச்சைகளும் நிறைந்த படமாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ நிச்சயம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப்படத்தின் வெற்றி விழாவில் அவர் வெளியிட்ட ‘கட்ட பஞ்சாயத்து’ விஷயத்திற்கு அவருக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என சம்பந்தப்பட்ட நபர்கள் கத்தியை கூர்தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
ஆனால் சிவகார்த்திகேயனை பாதுகாக்கும் கேடயமாக, அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும் உந்துசக்தியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துச்செய்தி அவரை மட்டுமல்ல, படக்குழுவினருக்கும் சேர்த்து உற்சாக டானிக் ஊற்றி இருக்கிறது.
‘ரெமோ’வை பார்த்துவிட்டு ‘ஒரு புதிய ஸ்டார் பிறந்திருக்கிறார்.. வாழ்த்துக்கள்’ என சூப்பர்ஸ்டாரே தன்னை போனில் அழைத்து வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இப்போது சூப்பர்ஸ்டாரின் ஆதரவும் மறைமுகமாக சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால் அவர் மீதான பஞ்சாயத்தை எப்படி தொடர்வது என குழம்பி போயுள்ளார்களாம் கட்ட பஞ்சாயத்து கோஷ்டியினர்.


