வீரப்பன் எனப்படும் முனுசாமி வீரப்பக்கவுண்டர் (1952 – 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார்.பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கர்நாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.
வீரப்பன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் அவர் கொள்ளை செய்த பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்..?
அரசின் கண்களில் படாமல் அரசு அதிகாரிகள் கண்களில் படாமல் எப்படி இவரால் இவ்வளவு பெரும் செயல்களை செய்தார் என்பதற்கும்..!
அவரின் சொத்துக்களை எந்த வங்கியில் சேமித்து வைத்துள்ளார் என்பது போன்ற ஞாயமான கேள்விகளுக்கு இதுவரை ஆதாரங்கள் சமர்ப்பிக்க இயலவில்லை ..!
மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டை என்கின்ற பெயரில் வீரப்பன் கிராமத்திற்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறை பற்றி அந்த ஊர் மக்கள் செய்த புகார்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் பெண்கள் பாதிக்கப்பட்டதற்கும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தகவல் இல்லை..
2004 அக்டோபர் 18 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.
அவருடைய நினைவுநாளான இன்று நாம்தமிழர்கட்சித்தலைவர் சீமான், தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள குறிப்பில்,
எல்லைச் சாமியாக
வனக் காவலராக இருந்த நமது ஐயா வீரப்பன் அவர்களினுடைய நினைவுநாள் இன்று (18-10-2016).
அவர் உயிரோடு இருக்கும்வரை ஒகேனக்கலில் கால் வைக்காத கன்னடர்கள், மேகதாது கட்டுவோம் என்று சொல்லாத கன்னடர்கள் இன்று அவர் இல்லையென்றவுடன் ஒகேனக்கல் எனது என்கிறார்கள் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்கிறார்கள்.
வீரப்பன் ஒரு மாயாவி, வீரப்பன் ஒரு திருடன், வீரப்பன் ஒரு கடத்தல்காரன் இப்படிதான் தமிழ் மக்களுக்கு அறியப்படுத்தினார்கள். யானைகளைக் கொன்று தந்தத்தைக் கடத்தினார். சந்தன மரக்கட்டைகளை வெட்டி விற்றார்.
விற்றவர் காட்டிற்குள் இருந்தார்! வாங்கியவர்கள் எங்கு இருந்தார்கள்?
விற்றவரையே தேடி 11 கோடி கொட்டிக் கைது செய்யத் துடித்த அரசு! சிறப்புப் படைகளை அமைத்த அரசு!
வாங்கியவர்களில் எத்தனை பேரைக் கைது செய்தது?
விற்றவன் காட்டிற்குள் இருந்தான்!
வாங்கியவன் நாட்டிற்குள் தானே இருந்தான்!
ஏன் கைது செய்யவில்லை?
நாட்டை ஆள்பவர்களே சாராய ஆலைகள் வைத்துக் காய்ச்சிக்கொண்டிருக்கின்ற காலத்தில்
காட்டுக்குள் வாழ்ந்த அவன் சாராயம் காய்ச்சினானா? வெற்றிலைப் பாக்கு போட்டானா? தேனீர் அருந்தினானா? சிகரெட், பீடி குடித்தானா? கட்டிய மனைவி தவிர வேறொரு பெண்ணின் நிழலைத் தொட்டானா?
நாகப்பாவைக் கடத்தியவன்; நயன்தாரா, நமிதாவைக் கடத்தினானா?
என்குலப் பெண்களின் மானத்தை விசாரணை என்கிற பெயரில் கெடுத்து அழித்தவனை
தடுத்துக் காத்த மானமறவன் நமது ஐயா வீரப்பனார்!
அவருடைய நினைவைப் பெருமிதத்தோடும் திமிரோடும் போற்றுவோம்!
நாம் தமிழர்!
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.