ஒரு மானத்தமிழன் உணர்ந்து ஓட்டளித்தாலும் நமக்கு வெற்றிதான் – நாம்தமிழர்கட்சியின் உள்ளாட்சி வியூகம்


உள்ளாட்சித்தேர்தல் பரபரப்பில் அனைத்துக் கட்சிகளும் இருக்கின்றன. நாம்தமிழர்கட்சி என்ன செய்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு விடை சொல்லும் விதமாக கட்சியின் மாநில இளைஞர் பாசறையைச் சேர்ந்த மணிசெந்தில் விடுத்துள்ள குறிப்பில்,

நாம் தமிழர் உறவுகளே..
உங்களை இறுகத் தழுவி.. இதயத்தோடு சில வார்த்தைகள்.
உள்ளாட்சித் தேர்தல் நம் அமைப்பை இன்னும் பரவலாக்க கிடைத்திருக்கும் மற்றொரு வாய்ப்பு.
எவ்வித விளம்பரமும் இல்லாது,ஊடக வலிமை இல்லாது ,சாதி மத அமைப்புகளை நேரடியாக எதிர்த்து, அதிகார பணபலம் உடைய திராவிடக்கட்சிகளுக்கு முடிவுரை எழுதி.. இந்திய தேசிய கட்சிகளை தமிழ் மண்ணில் புதைக்க வந்த புரட்சியாளர்கள் நாம்.
எது குறித்தும் அச்சப்பட ஏதுமில்லை. ஏனெனில்..நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.நம்மை நால்புறமும் எதிரிகள் சூழ்ந்து நிற்கின்றார்கள்..அது தான் நமக்கு சாதகம்.எந்த திசையிலும் நாம் அடிக்கலாம்.தனித்திருக்கிறோம். இங்கு எவரும் நமக்கு நண்பனில்லை.
அதுதான் நம் பலம். ஏனெனில் நமக்கு முன்னால் நிற்கும் எவரும் யோக்கியனில்லை.நாம் என்ன கருணாநிதி மகனா.. பேரனா..
சசிகலாவின் சொந்தக்காரனா..கொள்ளையடித்தை காப்பாற்றத் துடிக்க..நாம் கொள்ளை கொடுத்தவர்கள்.நாம் இழப்பதற்கு ஏதுமில்லை.
ஆனால்..
அடைவதற்கு ஆயிரம் இருக்கிறது.ஒரு மானத் தமிழன் உணர்ந்து ஓட்டளித்தாலும்.. நமக்கு வெற்றி தான்..ஊர் ஊராய் செல்வோம். மக்களிடம் உரையாடுவோம்.பிழைப்புவாத அரசியல் முகமுடிகளை கிழித்தெறிவோம்.அந்த நல்ல வாய்ப்பை தான் உள்ளாட்சித் தேர்தல் நமக்கு வழங்கியுள்ளது.அதிகார,பண,சாதிய வலிமையினால்இந்த களம் அவர்களுடையது என்பதான தோற்றம் இருக்கலாம்.
ஆனால்..காலம் நமது.
உறுதியாக அனைத்து இடங்களிலும் நாம் போட்டியிடுவோம்.மக்கள் மனதில் நாம் தமிழரை நங்கூரமாய் நடுவோம்.
புரட்சி புன்னகையோடு..களத்தில் சந்திப்போம்.
என்று சொல்லியிருக்கிறார்.

சீமான் ஊடகங்களிடம் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மற்ற கட்சிகளைப் போல விருப்பமனு வாங்குகிறோம் என நாங்கள் அறிவிக்கவில்லை. இப்படியொரு சடங்கு எதற்கு? கட்சியில் உண்மையாக உழைப்பவர் யார் என்று மாவட்ட நிர்வாகிகளுக்குத் தெரியும். அவர்களுக்கு வார்டுகளைக் கொடுத்து போட்டியிடச் சொல்லிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Response