மணிவண்ணன் பேசிய வசனந்தை பேசி தப்பிக்க முயற்சிக்கும் மித்ரன் ஜவஹர்..!


தனுஷ் படங்களைத்தான் இயக்குவாரோ என நினைக்கத்தூண்டும் வகையில் வரிசையாக தனுஷ் நடித்த படங்களாக இயக்கிய மித்திரன் ஜவஹர், இப்போது புதுமுக ஹீரோவை வைத்து மீண்டும் ஒரு காதல் கதை என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் இன்று வெளியாகியுள்ளது..

ஹீரோவைத்தான் மாற்றியுள்ளாரே தவிர, வேற்று மொழிப்படங்களை ரீமேக் செய்வதை மட்டும் இவர் மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை. தனக்கு ர்டீமேக் படங்களை இயக்குவதில் உடன்பாடு இல்லை என சொல்லிக்கொண்டே ரீமேக் படங்களாக இயக்குகிறார் மித்ரன். கேட்டால் நான் ரீமேக் படங்களை வெற்றிகரமாக இயக்குவதால், என்னை கட்டாயப்படுத்தி ரீமேக் படங்களாக இயக்க சொல்கிறார்கள் என அதற்கு ஒரு விளக்கம் சொல்கிறாராம்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா..? ‘உள்ளத்தை அள்ளித்தா படத்தில் டூப்ளிகேட் மணிவண்ணனை ஒரிஜினல் மணிவண்ணன் போல் மாற்றி வில்லன்கள் அனுப்பி வைப்பார்கள்.. அப்போது அவர் குடித்திருப்பார்.. அதுபற்றி கவுண்டமணியும் கார்த்திக்கும் அவரிடம் கேட்கும்போது, “நானாக குடிக்கவில்லை. என்னை அடி அடியென அடித்து குடிக்க வைத்துவிட்டார்கள்” என சொல்வார்.. மிகுந்த தமாஷாக இருக்கும்..

ஜெயம் ராஜாவே ரீமேக்கை விட்டு வெளியே வந்து சொந்தமாக கதை தயார் செய்து படமும் இயக்கி வெற்றியும் பெற்றுவிட்டார்.. மித்ரன் ஜவஹரும் இதே பல்லவியை இனியும் பாடாமல் சொந்தப்படம் இயக்கி தனது திறமையை நிரூபிக்கவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Response