சமரச தூதுவனாக மாறிய சீனுராமசாமி..!


விஜய்சேதுபதி நடித்துள்ள தர்மதுரை படத்தை தயாரித்துள்ளவர் ஸ்டுடியோ 9 சுரேஷ்.. ஆம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ‘வசந்தகுமாரன் என்கிற படம் தொடர்பாக மோதிக்கொண்டார்களே அந்த இருவரும் தான் இப்போது இணைந்துள்ளனர். இவர்களுக்குள் உள்ள பிணக்கு தீர்ந்தது எப்படி..? புதிய கணக்கு உருவானது எப்படி.? ஒரே நபர் தான் காரணம்.. அவர்தான் இயக்குனர் சீனுராமசாமி..

விஜய்சேதுபதி, சுரேஷ் இருவருக்குமே நெருங்கிய நட்பு வட்டாரமாக இருப்பவர் சீனு ராமசாமி. இவர்தான் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பேசி தீர்த்து, இருவரையும் ஒன்றிணைத்து ‘தர்மதுரை படத்தை உருவாக்கும் சூத்திரதாரியாக மாறினார்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் இன்று நடைபெற்ற தர்மதுரை இசைவெளியீட்டு விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தாங்கள் கருத்து வேறுபாட்டால் மோதிக்கொண்டது உண்மைதான் என விஜய்சேதுபதியும், சுரேஷும் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டதுதான்.

அந்தவகையில் கோபங்களை நீட்டிக்கமால், நட்பை நீட்டிக்க கரம் கோர்த்த இருவரையும் பாராட்டினாலும் தகும்.

Leave a Response