ஆதவ் சொன்னாலும் நம்பாதீர்கள் – விஜய் பேச்சால் சலசலப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில்,நடிகர் விஜய் கட்சியின் சார்பில் நேற்று மாலை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது….

நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்ததில் இருந்து சில வதந்திகள் சொல்லப்படுகிறது.அந்த டீம்..இந்த டீம் என்று சொன்னார்கள்.ஆனால் மக்களின் டீம் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.அதன்பிறகு வேறு என்ன அவதூறு பரப்பலாம் என நினைத்து செயல்பட்ட போதும் அது நடக்கவில்லை. இப்படியான நேரத்தில்தான் இந்தக் கூட்டணி, அந்தக் கூட்டணிக்குப் போகிறார் என பொய்யான பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்கள். அந்த செய்தியையெல்லாம் கேட்டு நீங்கள் குழப்பம் அடைந்து இருப்பீர்கள்.

எனவே நான் மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன், நான்.. நாங்கள்.. எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூகநீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக்கொள்ள மாட்டோம். நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும். இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது ரமலான் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், கூட்டணிப் பேச்சு நடக்கிறது என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள் என்று விஜய் சொல்கிறார்.இந்நிகழ்ச்சிக்கு முந்தையநாள் நிகழ்ச்சியில்தான் விஜய் கூடவே இருக்கும் ஆதவ் அர்ஜுனா, 90 சீட்டுகள், 50-50 என எவ்வளவோ டீல் பேசினார்கள் என்று சொன்னார்.

ஆதவ் அர்ஜுனா சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள் என்று விஜய் சொல்கிறாரா? அதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்வது ஏன்? என அக்கட்சியினர் பேசிக்கொள்கின்றனர்.

Leave a Response