
விஜய்க்கு வில்லன் விஜய்தான்.அவர் திருந்த மாட்டார் என அவருடைய முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
விஜய் யாரையும் மதிக்கமாட்டார் என்பதை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் உடனிருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.அவரை நம்பி யாரும் செல்லாதீர்கள்.எதுக்குமே உதவாத ஒரு நபர் உண்டென்றால் அவர் விஜய்.
வெளிநாட்டில் இருந்து உன்னை நம்பி வந்து திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற சகோதரி சங்கீதாவை கைவிட்டு, நீ மகளிர்தினம் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?.
நான் வந்தால் பெண்களுக்கு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று கூற உனக்கு என்ன தகுதி உள்ளது.
விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் சங்கீதாவுடன் இணைந்து வாழவேண்டும் என்று விரும்புகிறேன்.விஜய் – சங்கீதா திருமணம் ஆன காலம் தொட்டு அந்த வீட்டில் இருந்து பார்த்தவன் என்பதால் இதை சொல்கிறேன். சங்கீதாவை பொருத்தவரை ஒரு அமைதியான குடும்ப பாங்கான பெண்.
ஆனால்,இன்றைக்கு சங்கீதா ஒர்த் இல்லாதவர் என பெண்கள் மத்தியில் பேசுகிறார் என்றால் அவரது துரோக உள்ளத்தை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். பணமும்,புகழும் இருந்தால் எதையும் பேசலாம் என நினைக்கிறார்.மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
உன் கேரக்டரைப் பற்றி தெரியாத ஒரு தற்குறி கூட்டம், உன்னை சுற்றியுள்ளது.செங்கோட்டையன் போன்றவர்கள் தெரியாமல் உன்னை நம்பி வந்து சிக்கித் தவிக்கிறார்கள்.உனது இரசிகர்கள் கொஞ்சம், கொஞ்சமாக உன்னை விட்டுச் செல்லும் காலம் கண்முன்னே தெரிகிறது.
மகளின் பட்டமளிப்பு விழாவுக்குக் கூடச் செல்லாமல், திரிஷாவுடன் ஊர் சுற்றுகிறார்.இது ஆணவத்தின் உச்சம். நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.உன்னை நம்பி விபத்தில் சிக்கிய சாதாரண ஏழை பால் வியாபாரி மகன் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.
அந்தப்பையனைக் கவனிக்க ஆளில்லாத நிலை உள்ளதாக அங்கிருந்து எனக்கு தகவல்கள் வருகிறது.
எனவே விஜய்யை நம்பி செல்லாதீர்கள்.அவர் எந்த சூழ்நிலையிலும் திருந்தப்போவது இல்லை
இவ்வாறு பிடி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


