அடுக்கடுக்காய் இலவசம் அறிவித்த விஜய் அவ்வளவும் வீழ்ச்சி எனச் சாடிய சீமான்

புதுச்​சேரி நாம் தமிழர் கட்​சி​யின் அரசி​யல் மாநாடு மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வேட்​பாளர் அறி​முகக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டத்​தில் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கொடியை ஏற்றி வைத்துப் பேசி​ய​தாவது….

இது​வரை புதுச்​சேரி, தமிழ்நாட்டில் இருக்​கின்ற அரசி​யல் கோட்​பாடு,நிலை​ப்பாட்​டில் முற்​றி​லு​மாக எங்கள் கட்சியின் தத்​து​வ​மும்,கோட்​பாடும் மாறுகிறது.இவர்​கள் ஊழல்,இலஞ்​சம்.நாங்​கள் உண்மை,நேர்​மை.
நாங்​கள் மக்​களின் வாழ்க்​கை​யைப் பற்றிக் கவலைப்​படு​வோம்.அவர்​கள் ஓட்டைப் பற்றியே கவலைப்படு​வார்கள், நாங்​கள் நாட்டைப் பற்றிக் கவலைப்​படு​வோம்.

எல்​லா​வற்​றுக்​கும் இலவசம் அறிவிக்​கிறார்​கள்.இலவசம் என்​பது வளர்ச்​சித் திட்​டம் அல்ல.அது வீழ்ச்சித் திட்​டம். கவர்ச்சித் திட்​டம்.இலவசம் பெறவேண்​டிய ஏழ்​மை,வறுமை இல்​லாமல் எமது மக்​களை உயர்த்தவேண்​டும் என்பது எமது கடமை.

படித்​தவர்,படிக்​காதவர் அனை​வருக்​கும் அரசு வேலை.படிக்​காதவரே இல்லை என்ற நிலையை உரு​வாக்​கு​வதே இலக்​கு.ஆணும், பெண்​ணும் சமம்.இந்​தியக் கட்​சிகளின் மும்​மொழிக்​கொள்கை மோசடிக் கொள்​கை.இரு​மொழிக் கொள்கை ஏமாற்​றுக் கொள்கை.கொள்கை மொழி தமிழ்.தமிழ் பயிற்றுமொழி.ஆங்​கிலம் பாடமொழி.
பயன்பாட்​டு,தொடர்பு மொழி.இது​தான் எங்கள் கோட்​பாடு.

இது​வரை இந்த மாநிலத்​தில் இருந்த அரசி​யல் அடித்​தளத்தை நாம் தமிழர் கட்​சி​யின் கோட்​பாடும், தத்​து​வ​மும் தகர்க்​கிறது.ஆள்​மாற்​றம்,ஆட்சி மாற்​றம் தொடர்ந்து நடக்​கிறது.விடு​தலை பெற்ற இந்​தி​யா​வில் பல ஆண்​டு​களாக ஆள் மாற்​றம்,ஆட்சி மாற்​றம் தொடர்​கிறது.ஆள் மாற்​றம்,ஆட்சி மாற்​றம் அல்ல.அடிப்​படை அமைப்பு அரசி​யல் மாற்றமே எங்​கள்​ கோட்​பாடு.

இவ்வாறு சீமான் பேசினார்.

நேற்று சென்னையில் மகளிர்நாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்,

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையாக வெறும் ரூ.1000 மட்டுமே கொடுக்கப்படுகிறது.அதைவைத்து மளிகை சாமான் கூட வாங்கமுடியவில்லை.எனவே 60 வயது வரையுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதாமாதம் ரூ.2500 வழங்கப்படும்.இதில்,மாநில,மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதி விலக்கு.அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அண்ணன் சீர் திட்டம் மூலம் பெண்களின் திருமணத்துக்குத் தரமான பட்டுப் புடவையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும். காமராஜர் கல்வி உறுதித் திட்டத்தின் வாயிலாக மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை கொடுப்போம்.

வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் அரசுப்போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் திட்டத்தின் கீழ் ராணி வேலுநாச்சியார் படை ஏற்படுத்தப்படும்.இத்திட்டத்தின் கீழ் சாதாரண உடையில் கேமராக்களுடன் பெண்கள் பாதுகாப்புப்பணியில் இருப்பார்கள்.

ரேசன் கடைகள்,பள்ளி-கல்லூரிகளில் இலவச நாப்கின்கள் வழங்கப்படும்.சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும்.கூடவே மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 இலட்சம் வரையில் வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படும்.சுய உதவிக்குழுக்களில் பதிவு செய்து குறு, சிறு நிறுவனங்களாக மாறுவோருக்கு ஆண்டுக்கு ரூ. 5 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரமும்,பேபி வெல்கம் கிட்டும் வழங்கப்படும்.இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கின்றன.அதையெல்லாம் வரும் நாட்களில் நான் அறிவிப்பேன்.

இவ்வாறு அடுக்கடுக்காக இலவசங்களை அறிவித்தார் நடிகர் விஜய்.

மாலையில் சீமான் இதற்கு நேரெதிராகப் பேசியிருக்கிறார்.

சீமான் பேசியதுதான் சரி என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைக் காணமுடிகிறது.

Leave a Response