
அதிமுக கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்று தீவிரமாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து அவ்வப்போது வெளியில் பேசுவார்கள்.
இந்நிலையில், மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார்.அப்போது பல்வேறு கருத்துகளைக் கூறிய அவரிடம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.கவில் மீண்டும் இணைப்பது குறித்தும், கூட்டணிக்குள் அ.ம.மு.க.பொதுச்செயலர் டிடிவி.தினகரன் வருவது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது….
மக்கள் விரோத தி.மு.க அரசு மீது அ.தி.மு.க தவிர வேறு யாரும் கண்டனக் குரல்களை எழுப்பவில்லை. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க அளித்த 525 வாக்குறுதிகளில், 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. சட்டசபையைப் பார்க்காத சிலர் அ.தி.மு.க குறித்துப் பேசுகின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் நோக்கம். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று, ஒன்றுபட்ட கருத்துள்ள யாரும் இங்கு வரலாம். அ.தி.மு.க. பொதுக்குழுவிலும் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது தலைமை ஏற்று அனைவரும் வரவேண்டும். இந்த அழைப்பு தேவையானவர்களுக்குப் புரியும்; யாரும் தயங்கத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
எவ்வித நிபந்தனையுமில்லாமல் அதிமுகவில் இணையத் தயார் என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சொல்லிக் கொண்டிருந்த போது அவர்களை மதிக்காமல் நிராகரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இப்போது அவர்கள் இருவரும் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவிருக்கிறார்கள் என்கிற தகவல் கசிவதால்,இப்போது வருந்தி வருந்தி அழைக்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள்? என்பதை எதிர்பார்த்துத் தவித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் சொல்லப்படுகிறது.


