
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் எனப்படும் நிதிப்பகிர்வுத் துறை கூட்டத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று வந்தது குறித்து விமர்சனம் செய்து எதிர்ககட்சித தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் விஜய் ஆகியோர் நேற்று அறிக்கை வெளியிட்டனர்.
அதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ள கருத்து பின்வருமாறு…..
தவெக தலைவரும் நடிகருமான திரு.விஜய் அவர்களும்
அதிமுக பொதுச்செயலாளரும்முன்னாள் முதல்வருமான
திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தனித்தனியாக இப்படி அறிக்கை கொடுத்து வருகின்றனர்.
ஆனால்,ஒரே கருத்தைத்தான் திணித்துள்ளனர்.
இரண்டு அறிக்கைகளுமே
பாஜக தயாரித்து கொடுத்த அறிக்கை தான்.
எப்படி?
அதிமுகவுடன் மதவாத பாஜக கூட்டணியில் இருக்கிறது.
இந்நிலையில்,திமுக பாஜகவுடன் கூட்டணி செல்ல வாய்ப்பே இல்லை.
அமலாக்கத்துறை சோதனைகளுக்கு பயந்து தான் பிரதமரை முதல்வர் சந்திக்கிறார் என்னும் கருத்தும் ஏற்புடையதில்லை.
ஏனென்றால்,
உச்சநீதிமன்றத்தில் போய் இடைக்காலத்தடை வாங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு.உச்சநீதிமன்றமோ கடுமையாக அமலாக்கத்துறையை கண்டித்திருக்கிறது.
உண்மை இப்படி இருக்க அமலாக்கதுறைக்கு பயந்து தான் முதல்வர் சந்தித்துள்ளார் என்பது கடைந்தெடுத்த திரிபுவாதம் ஆகும்.
அதே போல நடிகர் விஜய் அவர்களோ நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு இந்த அறிக்கையை கொடுத்துள்ளது தெரிகிறது.ஏனென்றால்,
பாஜகவுடன் நேரடியாக கூட்டணியை வைத்திருக்கும்
அதிமுகவை விமர்சிக்காமல்பாஜகவை கடுமையாக
எதிர்க்கும் திமுகவை விமர்சிப்பதன் நோக்கமென்ன?
எல்லாமே பாஜகவின் திரிபுவாத செயல்திட்டம் தான்.
அதிமுகவுக்கும்
தவெகவுக்கும் ஒரே ஓனர் தான்.
நாதகவுக்கு ஆர்எஸ்எஸ் கூடுதல் ஓனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


