மக்கள்கவி கபிலனின் தூரிகை அறக்கட்டளை கவிதை விருது அறிவிப்பு – விவரம்

மக்கள்கவிஞர்,திரைப்படப் பாடலாசிரியர் கபிலனின் அன்புமகள் தூரிகை 2022 செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்திருந்த கவிஞர், தன் ஆற்றாமையைக் கவிதைகளாக வடித்து அவற்றை மகள் என்கிற பெயரில் தொகுப்பாகவும் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு நில்லாமல் மகள் நினைவாக தூரிகை அறக்கட்டளை தொடங்கியுள்ளார்.அதன் மூலம், 2024 ஆம் ஆண்டுக்கான கவிதை விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் குறிப்பில்…

தூரிகை அறக்கட்டளை தொடர்பாக,மகளின் இலக்கிய அறிவைப் போற்றும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தூரிகை கவிதை விருதை அறிவிப்பதில் அன்புமிகு மகிழ்ச்சி அடைகிறோம்.

பெண் கவிஞர்/ஆண் கவிஞர் என ஒவ்வொருவருக்கும் ரூ 25,000 வீதம் ரூ 50,000 தொகையும் விருதும் வழங்கி பெருமை கொள்கிறோம்.

இவ்விருதுக்காக..

சமூகப் பண்பாட்டு மாற்றத்திற்கான நவீனக் கவிதை நூல்கள் அழைக்கப்படுகின்றன.

2024 இல் வெளிவந்த முதல்படைப்பாக இருக்கவேண்டும்.

மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.

கவிதை நூல்கள் அனுப்ப கடைசி நாள் – 20.03.2025

முழுத்தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பைத் தவிர்க்கவும்.

நடுவர்களின் தீர்ப்பே தீர்மானமானது.

விருது விழா – 22.05.2025

புத்தகங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி…

தூரிகை அறக்கட்டளை,
எச் 92, திருப்பூர் குமரன் தெரு,
எம்.எம்.டி.ஏ காலனி,
அரும்பாக்கம், சென்னை – 600106

அழைப்புக்கு – 93840 21339

நிறுவனர்

கபிலன்
(திரைப்பாடலாசிரியர்)

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்துவிட்ட மகளின் நினைவுகளை சமுதாய மாற்றத்திற்கான உரமாக மாற்றியிருக்கும் கவிஞர் கபிலனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response