அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிச்சாமி பயப்படுவது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் இருப்பவர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் அதிமுக இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்திருப்பதுதான் தோல்விக்குக் காரணம். எனவே சசிகலா, ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

அதிமுகவில் பல அணிகள் இல்லாத நிலை ஏற்படுவதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்பது அதிமுகவின் மூத்த தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.

இந்த வேண்டுகோளை எடப்பாடி பழனிச்சாமி முற்றிலுமாக நிராகரிக்கிறார்.

ஓ.பி.எஸ், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லாத அதிமுக தான் தேவை என்பது எடப்பாடி பழனிச்சாமியின் விருப்பம்.

சாதியப் பின்புலம் கொண்டவர்கள் என்பதற்காக அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தால் சசிகலாவைத் தொடர்ந்து அவரது குடும்பம் நுழையும். பின் அவர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிடும்.தான் மீண்டும் கப்பம் கட்டும் இடத்துக்குச் சென்று விடுவோம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம்.அதை நினைத்துப் பயந்துதான் ஒருங்கிணைப்புக்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதற்காக,சசிகலாவை கட்சியில் சேர்த்தால் அவரும் அவர் குடும்பமும் உள்ளே வந்துவிடும். அவர்கள் மீண்டும், தங்களை தனி பவர் சென்டர்கள் போல உருவாக்க முயற்சிப்பார்கள்.அதன்பின் கட்சி ஒன்றாக இருக்காது. தமிழ்நாடு காங்கிரசில் உள்ளது போல பல அணிகள் அதிமுகவிலும் ஏற்பட்டுவிடும்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்ற என் தலைமையின் கீழ் அதிமுகவுக்கு 20 விழுக்காடு வாக்கு வங்கி இருப்பதை நிரூபித்துக் காட்டி இருப்பதாகச் சொல்கிறார்.எனவே, என் தலைமையில் அதிமுக தொடரவேண்டும் என்பது அவருடைய வாதம்.

இன்னொரு பக்கம், அதிமுக இப்போது கவுண்டர் சமுதாயம் மற்றும் தேவர் சமுதாயம் என இரண்டாகப் பிரிந்திருப்பதே தொடர் தோல்விகளுக்குக் காரணம்.இதனால் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை தனிமனிதர்களாகப் பார்க்கக் கூடாது என்பது ஒருங்கிணைப்பு வேண்டும் என்று விரும்புகிறவர்களின் வாதம்.

இப்போது இதே கருத்தை எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் வேலுமணி,தங்கமணி போன்றோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணத்துக்கு எதிரான கருத்துகள் அதிகரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இனி என்ன நடக்கும்? என்பது போகப்போகத்தான் தெரியும்.

Leave a Response