தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தமிழீழமே தீர்வு என்பதால், முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சிங்கள அரசுக்கும் இடையே கருவிப்போர் நடைபெற்று வந்தது.
2009 ஆம் ஆண்டு கருவிப்போர் முடிவுக்கு வந்தது.
அப்போது சிங்களக் கடற்படை தளபதியாக இருந்தவர் வசந்த கரன்னகொட.
எல்லாச் சிங்கள அதிகாரிகளையும் போல் இவரும் போர் விதிகள் எதையும் மதியாதவர். அக்காலப் பகுதியில் வசந்த கரன்னகொட மீது பல்வேறு போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவற்றில் 11 மாணவர்களைக் கடத்தி அவர்களது பெற்றோரிடம் பணம் பெற்றது, பின்னர் 11 மாணவர்களையும் காணாமல் ஆக்கச் செய்தது ஆகியவை மிக முக்கியமானவை.
இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு வசந்தர கொரன்னகடா இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வசந்த கரன்னகொட, இலங்கை வடமேற்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு மனைவியுடன் செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார் வசந்த கரன்னகொட.
அவர் போர்க்குற்றவாளி என்பதால், அவரது அனுமதி விண்ணப்பத்தை அமெரிக்கா அரசு நிராகரித்துவிட்டது. அதோடு,வசந்தர கரன்னகொட அவரது மனைவி அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
திட்டமிட்டு தமிழினப்படுகொலையில் சிங்களர்கள் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்த இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது என்பதால் சிங்களத் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.