அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம், எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு உள்ளிட்ட பல முடிவுகளை எடுத்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது.
அதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், எடப்பாடிபழனிச்சாமி, சசிகலா, டிடிவி.தினகரன் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.
அதை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து டிடிவி.தினகரன் கூறியிருப்பதாவது…..
தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.
அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.