தமிழ் மண்ணுக்கு எதிரானவரை கல்வி தொலைக்காட்சிக்கு நியமிப்பதா? – தமிழக அரசுக்கு எதிர்ப்பு

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் கல்வித் தொலைகாட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய காலம் முதல் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளே கல்வித் தொலைகாட்சியை நிர்வகித்து வந்தனர்.

இந்நிலையில் முதன்முறையாகப் பள்ளிக்கல்வித் துறையைச் சாராத ஒருவர் முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மணிகண்ட பூபதி என்பவர் முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்/ இவர், 2 ஆண்டு காலம் தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, அவரது செயல்பாடுகளைப் பொறுத்து அவரது பணி நீட்டிக்கப்படும் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

மணிகண்ட பூபதியின் நியமனத்துக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ரங்கராஜ் பாண்டே உடன் இணைந்து சாணக்யா டிவியை தொடங்கியவர் மணிகண்ட பூபதி.அவர் கண்டிப்பாக திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகவே இருப்பார். தமிழ் மண்ணிற்கு எதிராகவே இருப்பார். எனவே அவரது நியமனத்தை நீக்க வேண்டும் என்று பலர் சொல்லிவருகின்றனர்.

தமிழ்நாடு அரசு செவிசாய்க்குமா?

Leave a Response