ராஜபக்சே நிலை மோடிக்கும் வருகிறதா? – டிவிட்டரில் டிரெண்டாகும் வீட்டுக்குப்போமோடி

இலங்கையில் சிங்கள மக்கள் போராட்டம் வெடித்து அதிபர் மாளிகையைக் கைப்பற்றியுள்ளனர்.இதனால் அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் உள்ளிட்டோர் தப்பியோடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தின் தொடக்கம் சமூகவலைதளங்களில் தொடங்கியது. கோ ஹோம் ராஜபக்சே (வீட்டுக்குப்போராஜபக்சே) என்கிற குறியீட்டுடன் சமூகவலைதளமெங்கும் எதிர்ப்பலைகள் பரவின.

அப்போராட்டம் அப்படியே தொடர்ந்ததால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

அதன்பின்னும் தொடர்ந்த போராட்டங்கள் காரணமாக இப்போது அதிபர் கோத்தபயவும் தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் இன்று காலைமுதல் எரிவாயு உருளை விலை உயர்வு உள்ளிட்ட பல விசயங்களைக் குறிப்பிட்டு கோ ஹோம் மோடி (வீட்டுக்குப் போ மோடி)என்கிற குறியீடு முதலிடம் பிடித்துவருகிறது.

இதுவரை தென்னிந்தியாவில் மட்டும் இருந்த மோடி எதிர்ப்பு வட இந்தியாவிலும் பற்றியிருப்பது இதன்மூலம் தெரியவருகிறது.

இப்படியே போனால் இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்கு ஏற்பட்ட நிலை மோடி குழுவினருக்கும் ஏற்படும் என்கிற கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Response