சமையல் எரிவாயு உருளை விலை 50 ரூபாய் உயர்ந்தது – மோடியை வெறுக்கும் மக்கள்

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையை மே 7 ஆம் தேதியன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பின் மே 19 அன்று, வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை மூன்று ரூபாய் ஐம்பது காசுகள் அதிகரித்துள்ளது.அதன்படி விலை ஆயிரத்து பதினெட்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று,சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ 50 உயர்த்தப்பட்டு, ரூ 1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வால், மோடி அரசு மீது மக்கள் கடும் வெறுப்பு அடைந்துள்ளனர்.

Leave a Response