இந்திய எல்லைக்குள் இன்னொரு பாலம் கட்டும் சீனா – மோடி அரசு என்ன செய்கிறது? இராகுல் கேள்வி

இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என இராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் மிகப்பெரிய அளவில் ஏற்கனவே சீனா ஒரு பாலத்தைக் கட்டி முடிந்துவிட்டது. தற்போது அதே இடத்தில் இரண்டாவது பாலத்தையும் கட்டி எழுப்பி வருகிறது. இது புதிய பாலமா? அல்லது முதல் பாலத்தின் விரிவாக்கமா? என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதே நேரம் சீனா பாலம் கட்டி வரும் பகுதி இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிதான் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்….

இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும். லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரி கூறியதை மேற்கோள்காட்டி இராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பதை மறுப்பதன் மூலம் ஒன்றிய அரசு இந்தியாவுக்குத் துரோகம் இழைக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response