அரசியலில் இறங்க ஆழம் பார்க்கும் விஜய் – இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிப்ரவரி 19,2022 அன்று தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் இரசிகர் மன்றத்தினரும் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தலைவராக இருக்கும், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்து என்பவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

தமிழ்நாட்டில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவின்படி
தளப்தி விஜய் மக்கள் இயக்கம் எந்தக் கட்சியுடன் கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது.எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்டத் தலைவர்களும் அணித்தலைவர்களும் ஒன்றிய நகரப் பகுதி தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் இரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாகச் செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் முழுநேர அரசியலில் இறங்குவதற்காக விஜய் ஆழம் பார்க்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response