நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 2,2022) இராகுல்காந்தி ஆற்றிய உரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் கருத்துகளை வலியுறுத்தி அவர் உரையாற்றினார். அதற்காக அவருக்கு மிகவும் நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அவருடைய ட்விட்டர் பதிவில்..
அன்பு இராகுல்காந்தி,சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களை பாராளுமன்றத்தில் நீங்கள் எதிரொலித்திருக்கிறீர்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.