பல கோடி ரூபாய் பணத்தை எரித்தாரா நத்தம் விஸ்வநாதன்? – திண்டுக்கல்லில் பரபரப்பு

என்னங்க மினிஸ்டர் இப்படிப் பண்ணிட்டாரு? இல்லாதவங்களுக்கும் கட்சிக்காரங்களுக்கும் குடுத்திருந்தா எல்லாரும் அவரைத் தெய்வமா மதிச்சிருப்பாங்களே?

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசியல்கட்சிப் பிரமுகர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் குரலைத் தாழ்த்தி கமுக்கமாக இப்படித்தான் உரையாடுகிறார்களாம்.

என்ன நடந்ததாம்?

அண்மையில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமான என்பிஆர் கல்லூரி வளாகத்தில்
பத்துக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த இருக்கைகள் (சோபாக்கள்) தீ வைத்து எரிக்கப்பட்டன என்றும் அவை வெறும் இருக்கைகள் அல்ல கோடிக்கணக்கான பணத்தைத் தன்னகத்தே புதைத்து வைத்திருந்த இருக்கைகள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சோபாக்கள் மிகவும் பழசாகிவிட்டன எனவே இவற்றை எரித்துவிடுங்கள் எனும்போது பணியாளர்கள் சிலர் அவற்றை எங்களுக்குக் கொடுங்கள் நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று கேட்டார்களாம். அவர்களுக்குக் கொடுக்க மறுத்ததோடு முற்றிலும் எரித்துச் சாம்பலாக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உத்தரவிட்டார் என்பதுதான் அரசியல்கட்சிக்காரர்களின் இரகசியப்பேச்சின் சாரம்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல்புகார்கள் வநதவண்ணம் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு ஆளாகியுள்ளார்கள்.

அவர்களைத் தொடர்ந்து மின்சாரத்துறையில் பல இலட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதென்றும் அதன் விளைவாக முன்னாள் மின்துறை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சிக்கலைச் சந்திக்கவிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதனால், இலஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு ஆட்பட நேரிடும் என்பதால் நத்தம் விஸ்வநாதன், தன்னிடமிருந்த கணக்கில் வராத பல கோடிக்கணக்கிலான பணத்தை எரித்துவிட்டார் என்பதுதான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

இது உண்மையா? பொய்யா? என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விசயம்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் என்பது உண்மை.

Leave a Response