கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 101.67 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ 94.39 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 25 காசுகள் உயர்ந்து ரூ.101.92க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.