கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல், இலிட்டர் 97.91 ரூபாய்க்கும், டீசல் இலிட்டர் 92.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், சென்னையில் ஒரு இலிட்டர் பெட்ரோல் விலை 23 காசு அதிகரித்து ரூ.98.14க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு இலிட்டர் டீசலின் விலை 27 காசு அதிகரித்து ரூ.92.31க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
இதைக் கவனிக்கத்தான் ஆளே இல்லை.