இன்றும் விலை உயர்வு – மோடியைத் திட்டும் மக்கள்

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

நேற்றைய தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97.19 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.43 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 91.46 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இதனால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வஞ்சிப்பதா? என மோடியை மக்கள் திட்டுகின்றனர்.

Leave a Response