ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் பிரிவு தற்காலிகமாகத் திறப்பு – அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவை ஏற்று நடத்தினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 9.15 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி ஆகியனவற்றுக்கு அழைப்பு இல்லை.

இக்கூட்டத்தில், ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் ஸ்டெர்லை ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response