சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மொயின் அலி பற்றி எழுத்தாளர் தஸ்லிமா கிண்டல் – சர்ச்சை வெடித்தது

இங்கிலாந்து மட்டைப்பந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி. இவர் ஐ.பி.எல் 2021 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார்.

மொயின் அலி தனது உடையில் இருக்கும் மதுப்பான விளம்பரத்தை நீக்கச் சொன்னார் என்று தகவல்கள் வெளியானது.

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுபோன்று அவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, இந்தத் தகவல் வெறும் வதந்தி என்று கூறி மொயின் அலி குறித்த செய்திகளுக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைத்தது.

தற்போது மீண்டும் மொயின் அலி குறித்து சர்ச்சை கிளம்பி உள்ளது. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தனது ட்விட்டரில், மொயின் அலி கிரிக்கெட்டில் சிக்காமல் இருந்தால், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் என்று பதிவிட்டிருந்தார்.

தஸ்லிமாவின் இந்தக் கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்து நீங்கள் நலமாக இல்லை என்று நினைக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

இவர் மட்டுமின்றி, மேலும் சில இங்கிலாந்து வீரர்கள், மொயின் அலியின் தந்தை என பலர் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தஸ்லிமா தனது கருத்திற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், என்னை வெறுப்பவர்களுக்குத் தெரியும் நான் மொயின் அலி குறித்து பதிவிட்ட கருத்து இயற்கையாகவே கிண்டலானது தான். ஆனால் அவர்கள் முஸ்லீம் சமுதாயத்தை மதமயமாக்க முயற்சிக்கிறார்கள், இஸ்லாமிய வெறித்தனத்தை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் என்னை அவமானப்படுத்தும் ஒரு பிரச்சினையாக அவர்கள் செய்தார்கள். மனிதகுலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று, பெண்கள் சார்பு இடதுசாரிகள் பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response