மு.க.ஸ்டாலின் துரைமுருகன் தொகுதிகளில் தேர்தலை நிறுத்த அதிமுக மனு – திமுகவினர் கோபம்

நாளை தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்லாஊ. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர்,எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை,உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம்,துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி,கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளில் திமுக நவீன முறையில் பணப்பட்டுவாடா செய்து உள்ளது. எனவே ஐந்து தொகுதிகளில் தேர்தலை இரத்து செய்ய அதிமுக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

திமுக தலைவர், பொதுச்செயலாளர், இளைஞரணிச் செயலாளர், அமைப்புச்செயலாளர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அதிமுக கூறியுள்ளது. அதுவும் கடைசிநேரத்தில் கூறியுள்ளது.

இதனால் திமுகவினர் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். இதுகுறித்து திமுக கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள பதிவில்…

கொளத்தூர்( மு.க ஸ்டாலின்,) சேப்பாக்கம் ( உதய நிதி), கரூர்( செந்தில்பாலாஜி) , திருவண்ணாமலை ( எ.வ.வேலு) , திருச்சி மேற்கு( கே.என் நேரு) உள்ளிட்ட ஏழு தொகுதிகளில் தேர்தலை நிறுத்தவேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

கோழைகள் தங்கள் கடைசி ஆயுதத்தை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். தேர்தல் ஆணையர் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்கிறார். கடைசி நிமிட அறிவிப்பாக மாலையில் மோசமான நடவடிக்கைக்கு திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. அப்படி நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் ஆளும் கட்சி கூட்டணிக்கு தமிழக மக்கள் சாவுமணி அடிப்பார்கள். இந்தத் தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுக எல்லா தொகுதிகளிலும் பல்லாயிரம் கோடிக்கணக்கான பணத்தை வாரியிறைத்து வருகிறது. ஆனால் பணப்பட்டுவாடா காரணத்தைக் காட்டி முக்கிய திமுக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளை குறிவைத்து தேர்தல் நிறுத்தப்பட்டால் அது பச்சை ஜனநாயக படுகொலை மட்டுமல்ல, தேர்தல் என்ற நடைமுறையிலேயே மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் இந்த தேர்தல் நிறுத்த நாடகத்தை ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

எந்த ஜனநாயக அறத்திலும் நம்பிக்கை அற்ற சக்திகள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எந்த இழி செயலுக்கும் தயங்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response