கமல்ஹாசன் சரத்குமார் கட்சிகள் தொகுதிப் பங்கீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

நேற்றிரவு (மார்ச் 8,2021), அக்கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் சி.கே. குமரவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதன்படி, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு, தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி என்ற விவரத்தை கூட்டணிக் கட்சிகள் முடிவெடுத்து அதற்கான பட்டியலை விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.

Leave a Response