திமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டது மதிமுக – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இன்று ( மார்ச் 6) மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த உடன்பாடு மூலம் திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுகிறது என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response