அமைச்சர் முன்னாள் அமைச்சர் பகிரங்க மோதல் – ஈரோடு அதிமுக பரபரப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.சி.கருப்பணன்.

இவரை சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ந்நியமித்தார் ஜெயலலிதா.

அமைச்சராக மட்டுமின்றி அதிமுக வில் மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருக்கும் தோப்பு வெங்கடாசலம் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.

சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களைக் கட்சியில் சேர்ப்பது, பெருந்துறை தொகுதி அதிமுகவினரை அவமானப்படுத்துவது உள்ளிட்ட பல செயல்களைச் செய்து அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார் என்று பகிரங்கமாக்க் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரைக்காக சனவரி 6, 7 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் செல்லவிருக்கும் நிலையில் தற்போதைய அமைச்சருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Response